Categories
தேசிய செய்திகள்

மோடி உங்களுக்கான சட்டங்களை பலவீனப்படுத்துகிறார்…. குற்றம் சாட்டிய ராகுல் காந்தி….!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி இந்தியாவின் ஒற்றுமைக்கான பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். அதன் பின்னர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களை கடந்து தற்போது மராட்டிய மாநிலத்தில் பாதயாத்திரை நடந்து வருகிறது. இந்நிலைகள் நேற்று அங்கு பழங்குடி பெண்கள் தொழிலாளர் சம்மேளன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி கூறியதாவது. நமது இந்திய நாட்டின் முதல் உரிமையாளர்கள் பழங்குடியின மக்கள் என எனது பாட்டியான இந்திரா காந்தி கூறுவார்.

ஏனென்றால் அவர்களுக்கு மற்றவர்களைப் போல அனைத்து அதிகாரங்களும் உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அவர்களின் நலனுக்காக கொண்டு வந்த பஞ்சாயத்துக்கள் சட்டம், வன உரிமைச் சட்டம், நில உரிமை சட்டம்  போன்ற சட்டங்களை தற்போது ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி மிகவும் பலவீனப்படுத்துகிறார். மேலும் அவர் பழங்குடியின மக்களை வனவாசிகள் என்று அழைக்கிறார். அதற்கு பல்வேறு அர்த்தங்கள் உண்டு. இந்நிலையில் வனவாசி என்றால் நீங்கள் காட்டில் தான் வாழ முடியும். நகரங்களில் உங்களுக்கு வாழ உரிமை கிடையாது. மேலும் உங்கள் குழந்தைகள் படித்து டாக்டராகவோ இன்ஜினியராகவோ முடியாது விமானத்தில் பறக்க முடியாது என கூறுகிறார்.  மேலும் பழங்குடியின மக்களின் நிலங்களை எடுத்து மோடி தொழிலதிபராக உள்ள தனது நண்பர்களுக்கு தாரை வார்க்க விரும்புகிறார்.  இனி நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இந்த சட்டங்களை எல்லாம் மேலும் பலப்படுத்துவோம். மேலும் உங்களின் நலனுக்காக புதிய சட்டங்களை இயற்றுவோம் என கூறியுள்ளார்.

Categories

Tech |