நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, காங்கிரஸ் ஆட்சியில் பெற்றோல் டீசல் விலை உயர்ந்தால் அது செய்தி. பாஜக ஆட்சியில் விலை உயரா விட்டால் அது செய்தி என்று விமர்சித்தார். அன்று எப்பொழுதாவது ஏறும், இன்று எப்பொழுதும் ஏறுகிறது என்று குறிப்பிட்ட அவர், மோடி உறுதி அளித்த நல்ல ஆட்சி இவைதான் என்று கூறினார்.