modisarkar என்ற ஹாஷ்டேக் ஐ பின்னுக்கு தள்ளி நேசமணி ஹாஸ்டேக் ஆனது ட்ரெண்டிங்கில் வளம் வலம்வந்து கொண்டு இருக்கிறது
வெளிநாட்டு இன்ஜினியர் ஒருவர் hammerக்கு தமிழில் என்ன என்று நம்ம ஊரு இன்ஜினியரிடம் கேட்டுள்ளார், அதற்கு சுத்தியல் என்று பதிலளித்த அவர் அதனுடன் சேர்த்து பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு தலையில் சுத்தியல் விழும் காமெடி காட்சி ஒன்றையும் இணைத்து அனுப்பி உள்ளார்.
இதனை பார்த்துவிட்டு வீடியோ உண்மை என்று நம்பி இவர் யார் என்று அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு இவர்தான் பெயிண்டர் நேசமணி என்று தெரிவிக்க அவர் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு முகநூலில் #prayfornesamani ,#savenesamani என்று போட்டு டிரெண்ட் ஆக்கி விட்டார். இது தற்போது தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் டிரெண்டாகி வருகிறது.
இதனை தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்க உள்ள நிலையில் #modisarkar2 ,#modiswearingin போன்ற ஹாஸ்டேக்குகள் இன்று காலை வரை டிரெண்டிங்கில் இருந்தன. ஆனால் சிறிது நேரத்திலேயே தமிழக மக்கள் நேசமணி ஹாஸ்டேக்கை அதிகமாக பயன்படுத்தி மோடி ஹாஷ்டேக்கை பின்னுக்கு தள்ளி தற்போது முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கிறது.