மோடி சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த, சாதாரண மனுஷன் என காயத்ரி ரகுராம் பிரச்சாரத்தில் பேசினார்
பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த காயத்ரி ரகுராம், தயவு செய்து இந்த திருட்டு கும்பலை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள். உங்களுக்கு திட்டங்கள் கண்டிப்பா வந்து சேர வேண்டும் என்றால் எங்களின் வேட்பாளர் மகாலிங்கம் அவர்களுக்கு தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அதே போல மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் என்ன கொடுத்தார்கள் ? அரிசி கொடுக்குறேன் என்று சொல்லிட்டு அரிசியில் கூட ஊழல் செய்தார்கள். அரிசியில் கூட ஊழல் செய்தவர்கள் இன்று ஆட்சியில் உட்கார்ந்து இருக்காங்க. இதுவரைக்கும் ஓகே… அப்பா ஆட்சி செய்து போயாச்சு, அவரது மகன் என்ன செய்ய போகிறார் என்று யாருக்குமே தெரியாது ? இதுவரைக்கும் வெளியில் வரவில்லை.
இதுக்கு அப்புறமும் வர மாட்டாங்க ? ஏனென்றால் அவர்கள் குடும்பத்திற்கு மட்டுமே தான் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர மக்களுக்காக கிடையவே கிடையாது. ஆனால் பாரத பிரதமர் அந்த மாதிரி கிடையாது, உங்களை போல சாதாரண மனுஷன், சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர் என கட்டமாக பேசினார்.