பிரதமர் மோடி உண்மையை பேசுவதில்லை, அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மீண்டும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உலகளாவிய கொரோனா இறப்பு எண்ணிக்கையைப் பகிரங்கப்படுத்தும் உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துகிறது’ என்று நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை எடுத்துக் காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் . உலகளாவிய இறப்பு எண்ணிக்கையை பொதுவெளியில் பகிரங்கப்படுத்தும் உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துகிறது என்று தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து ராகுல்காந்தி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “மோடிஜி உண்மையை பேசுவதில்லை, மற்றவர்களை பேசவும் விடுவதில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை என்று அவரே இன்னும் பொய் கூறி வருகிறார். கொரோனா காலத்தில் அரசாங்கத்தின் அலட்சியத்தால் 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள் மோடி ஜி, இறந்தவர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புகைப்படத்துடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.