தாயார் ஹீராபென் மறைவை அடுத்து, பிரதமர் மோடி அகமதாபாத் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தனது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை பார்த்து, சொல்ல முடியாத துயரத்தில் கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி 7800 கோடியில் ஏராளமான நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருந்த நிலையில் அவருடைய தாயார் இறந்துள்ளார். இதனால் அவருடைய சுற்றுப்பயணம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
It is always special to be among the people of West Bengal. Tomorrow, 30th December is an important day for the growth trajectory of the state. Development works over Rs. 7800 crore would either be inaugurated or their foundation stones would be laid. https://t.co/pKISRE6hUc
— Narendra Modi (@narendramodi) December 29, 2022
இருப்பினும் வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட திட்டப்பணிகளில் காணொலி வாயிலாக பிரதமர் பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் இந்த நிகழ்ச்சிகளை நாளையோ அல்லது அதற்கு பின்னரோ தள்ளி வைக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் தனது தாய் இறந்த துக்கத்திலும் காணொளி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.