Categories
அரசியல்

மோடி நமக்கு 6000 ரூபாய் பேங்க்ல போடுறார்… ஸ்டாலின் ஒண்ணுமே பண்ணல! – காயத்திரி ரகுராம் காட்டம்

மோடி நமக்கு 6000 ரூபாய் பேங்க்ல போடுறார்… ஸ்டாலின் ஒண்ணுமே பண்ணல என பாஜகவின் காயத்திரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த பாஜகவின் காயத்திரி ரகுராம், ஸ்டாலின் அவர்கள் அவர் குடும்பத்திற்காக மட்டும்தான் ஆட்சி செய்து கொண்டு இருக்கின்றார். அவர் குடும்பத்துக்கு மட்டுமே தான் யோசிக்கிறாரே… இங்கு இருக்கின்ற கிராம மக்கள் உங்களுடைய குடும்பத்திற்கு எந்த நல்லதும் செய்தது கிடையாது எதிர்க்கட்சிகள்.

உங்களுக்கெல்லாம் என்ன நடந்திருக்கு ? என்ன வேணும் என உங்களை வந்து சந்தித்தாரா ? பொய் வாக்குறுதி கொடுக்கிறதோடு சரி அதுக்கப்புறம் எதுமே தந்தது கிடையாது. மகன் ஷூட்டின் போயாச்சு,  மக்களுக்கு என்ன தேவை? அதெல்லாம் எதுவுமே கிடையாது. அவங்க சொன்ன ஒரு வாக்குறுதி ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு தரேன் என்று சொன்னார்கள், அது வந்துசா இல்லை.

நகை கடனை அடைக்குறேன் என்று சொன்னார்கள் அடைத்தார்களா ? கிடையாது. ஆட்சிக்கு வந்த கொஞ்ச நாள்ல என்ன பண்ணி இருக்காங்க ? நீங்க சொல்லுங்க. இதற்க்கு முன்பு எவ்வளவு வருஷம் ஆட்சியில் இருந்தாங்க திமுக, இதுக்கு முன்னாடி என்ன பண்ணி இருக்காங்க ?  ஒண்ணுமே பண்ணது கிடையாது.ஆனால் நம்முடைய பாரத பிரதமர் வருஷம் 6000 ரூபாய் விவசாயிகளுக்கு தருகிறார்கள். விவசாயிகளுக்காக நேரடியாக அவரது வங்கி கணக்கில் வந்து விழுகிறது 6000ரூபாய் இவங்க என்ன பண்ணுவாங்க ? அதுக்கு ஒரு  ஸ்டிக்கர் ஒட்டிட்டு நாங்கள் செய்தோம் என சொல்கிறார்கள் கடுமையாக திமுகவை விமர்சித்தார்.

Categories

Tech |