Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடி பேச்சு அரசு பதிவேட்டிலிருந்து நீக்கம்

மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் சில பகுதிகள் நாடாளுமன்ற பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கடந்த 6ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அப்போது, அரசு நலத்திட்டங்களை சரியான நபர்களுக்கு கொண்டு சேர்க்க தேசிய மக்கள்தொகை பதிவேடு உதவும் என்றார்.

மேலும், அதனை கொண்டுவந்தததே காங்கிரஸ் கட்சி தான் என்றும் தற்போது அவர்கள் பல்டி அடிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் உரையில் சில பகுதிகளை நாடாளுமன்ற பதிவேட்டிலிருந்து நீக்குமாறு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணை தலைவருமான வெங்கயா நாயுடு உத்தரவிட்டார்.

இதேபோல, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி அஸாத் கூற்றின் சில பகுதிகளையும் நீக்குமாறு வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

மாநிலங்களவையில் குலாம் நபி அஸாத் பேசியபோது, “பாகிஸ்தானில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியா வருவோருக்கு குடியுரிமை அளிப்பதை தான் வரவேற்பதாகவும், ஆனால் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இயற்றுவதையே தான் எதிர்ப்பதாகவும்” கூறினார்.

Categories

Tech |