காங்கிரஸ் ஆளும் மாநிலமான சத்தீஸ்கரில் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக அம்மாநில முதலமைச்சரின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக அம்மாநில முதலமைச்சர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டு தரப்படுகின்றன. இதற்கு இரு மாநிலங்களைச் சேர்ந்த பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசு அளிக்கும் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களில் பிரதமரின் படம் நீக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
மாநில அரசு நிதி சுமையில் இருக்கும் நிலையிலும் கூட பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கி தடுப்பூசி செலவை ஏற்று உள்ளதாகவும் அப்படி இருக்கையில் தடுப்பூசி சான்றிதழில் மட்டும் ஏன் பிரதமரை புகைப்படத்தை போட வேண்டும் எனவும் ஆளும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.