Categories
தேசிய செய்திகள்

மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்… மருத்துவ சங்கம் போர்க்கொடி!

இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது தலைநகர் தில்லியில் கடந்த ஜனவரி 2-இல் ஜைடஸ் காடிலா, டொரண்ட் பார்மாஸிட்டிகல்ஸ், வாக்ஹார்ட் உள்ளிட்ட மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதி களைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் சந்தைப்படுத்துதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, மருந்துத் தயா ரிப்பு நிறுவனங்கள் தங்களது மருந்து களை பரிந்துரைக்க, பெண்களை அனுப்பி வைப்பது, வெளிநாட்டு பயணங்களுக்கு ஏற்பாடு செய் வது, பரிசுப் பொருட்கள், பணம் உள்ளிட்டவைகளை மருத்துவர் களுக்கு லஞ்சமாக கொடுப்பது தொடர்பாக பிரதமர் மோடி எச்சரி க்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இது தற்போது சர்ச்சையாகி உள்ளது. பிரதமர் இவ்வாறு பேசினாரா இல்லையா? என்று பிரதமர் அலு வலகம் பதிலளிக்க வேண்டும். ஆதா ரத்துடன் நிரூபிக்க வேண்டும் அல் லது மறுப்பு தெரிவிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

“குற்றச்சாட்டில் தொடர்புடை யதாக கூறப்படும் மருத்துவர்களின் பெயர்களை பிரதமர் அலுவலகம் தெரிவிப்பது அவசியமான ஒன்று. அப்போதுதான் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் மருத்துவர்கள் மீது மாநில மருத்துவ சங்கம் நடவடிக்கையை எடுக்க முடியும்” என்று கூறியுள்ள மருத்துவ சங்கம், “மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகா தாரத்துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீடு 1-1.3 சதவிகிதம் என்ற தேக்க நிலையிலேயே உள்ளது. உட்கட்டமைப்பு, மனிதவளம் உள்ளி ட்டவைகளில் புதிய முதலீடுகள் இல்லை. இதையெல்லாம் திசைத்திருப்பும் விதமாகவே பிரதமர் அலுவலகத்தின் கூட்டம் இருப்பதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. “பிரதமரின் பேச்சு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஒருவேளை பெண்களை மருத்துவர்களுக்கு அனுப்பி வைக்கும் குற்றச்சாட்டில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது குற்ற வியல் நடவடிக்கை எடுக்காமல் அவர்களை பிரதமர் மோடி தனிப் பட்ட முறையில் சந்தித்து எச்சரித் தது ஏன்?” என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ராஜன் சர்மா  கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |