Categories
தேசிய செய்திகள்

மோடி..மோடி.. என கோஷம் எழுப்பிய நபர்கள்: “உங்கள் மனதை நாங்கள் வெல்வோம்”…. அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்பீச்….!!!!

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு போட்டிப்போடும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சமகால் மாவட்டத்தின் ஹலோலில் நேற்று பிரமாண்ட சாலை பேரணி நடத்தினார்.

இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியபோது, கூட்டத்திலிருந்த சில பேர் மோடி..மோடி..! என கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு நிமிடம் ஷாக்கான அரவிந்த் கெஜ்ரிவால், பின் பேச்சை தொடர்ந்தார். அப்போது அவர் பேசியதாவது, சில நண்பர்கள் மோடி..மோடி.! என கூச்சலிடுகின்றனர்.

நீங்கள் விரும்பியவர்களுக்கு ஆதரவாக கோஷம் போடுங்கள். நான் உங்களது பிள்ளைகளுக்காக பள்ளிகள் உருவாக்குவதோடு, இலவச மின்சாரம் தருவேன். மேலும் எங்களுக்கு யாருடனும் பகையில்லை. நீங்கள் யாருக்காக வேண்டுமானாலும் ஆதரவு கோஷம் எழுப்பலாம். ஒரு நாள் உங்களது மனதை வென்று எங்களின் கட்சிக்கு அழைத்துவருவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

Categories

Tech |