தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் மோடிதான். எனவே அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார். தற்போது கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தற்போதைய நிலைமைக்கு மோடி தான் காரணம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.