கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என்பது தெரிந்த விஷயம் தான். பிரதமர் மோடியின் விருப்பத்திற்கு மாறாக வேறு ஒருவரை முதல்வராக கொண்டுவந்தவர் சசிகலா. அதிமுக தலைமை சசிகலாவிடம் சென்றுவிடக் கூடாது என மோடி, அமித்ஷா கவனமாக இருந்தனர்.
கூவத்தூரில் என்ன நடந்தது என அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். அதிமுகவிற்கு பின் பாஜக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, உண்மை ஒரு நாள் வெளியே வரும். பிரதமர் மோடி வல்லவராக இருக்கலாம், ஆனால் சசிகலாவை எளிதில் எடைபோடக்கூடாது காத்திருங்கள் என கருணாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.