Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் சென்ற கோழி வியாபாரி… வழியில் மர்ம நபரின் கைவரிசை…. பரபரப்பு சம்பவம்….!!!!

திருச்சி மாவட்டம் முசிறி அழகாபட்டி பகுதியில் வசித்து வருபவர் விக்னேஷ் (25). இவர் இப்போது கரூர் வெங்கமேடு எஸ்.பி. காலனியில் தாத்தா பொன்னுச்சாமி (72) வீட்டில் தங்கியிருந்து அவர் நடத்திவரும் கோழிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் கடைக்கு தேவையான கோழிகளை வாங்குவதற்காக நேற்று முன்தினம் அதிகாலையில் காணியாளம்பட்டி அருகேயுள்ள மஞ்சா நாயக்கன்பட்டியில் கூடும் கோழி சந்தைக்கு தன் தாத்தாவை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இதையடுத்து வெள்ளியணை அருகில் உள்ள அய்யம்பாளையம் காலனி பகுதியில் கரூர்-மணப்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் காரில் வந்த மர்ம ஆசாமிகள் 4 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அதன்பின் மர்ம ஆசாமிகள் விக்னேஷ் கண்ணில் ஸ்பிரே அடித்து மிரட்டி, அவர் தாத்தா பொன்னுச்சாமி வைத்திருந்த ரூ.14 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக விக்னேஷ் அளித்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |