செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் காரத்திட்டு பகுதியில் வசித்து வந்தவர் நித்தியானந்தம் (28). இவர் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலை காரணமாக கல்பாக்கம் அடுத்த காத்தான் கடை பகுதியிலுள்ள சாலை வளைவில் போகும்போதும் எதிர்பாராத வகையில் நித்தியானந்தம் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரேவந்த மணல் லாரி மோதியது.
இதனால் நித்தியானந்தம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் நித்தியானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.