Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மீது மோதிய வாகனம்…. வாலிபர் பரிதாப பலி….. பெரும் சோகம்…..!!!!

சென்னை சைதாப் பேட்டை ஜோதிராமலிங்கம் நகர், வி.கே.கிருஷ்ணன் தெருவில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணியன் (25). இவர் கோடம்பாக்கத்திலுள்ள பிரபல வாட்ச் ஷோரூமில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை மோட்டார்சைக்கிளில் தன் தோழியை பார்ப்பதற்காக பாலசுப்பிரமணியன் பொத்தேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மின் வாரியம் எதிரே போகும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதனால் பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையின் விபத்தில் இறந்துபோன பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |