Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நண்பரை பிரிந்த போலீஸ்…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது சாலையின் தடுப்பு சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கோவில் காடு கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னை மாநகர காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். மேலும் மேட்டூர் பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் அதே காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த போது மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ராமச்சந்திரனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் சக்திவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |