Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சாகசம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் அடையாறு காவல்துறையினர் கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வெட்டுவாங்கேணி பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் சோழிங்கநல்லூரை சேர்ந்த எலக்ட்ரீசியனான தியாகராஜன் மற்றும் பொக்லைன் எந்திர டிரைவரான முத்துக்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தியாகராஜன் மற்றும் முத்துக்குமார் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |