Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி… லாரிக்கும்,காருக்கும் இடையில் சிக்கிய வாகனம்… உயிர் தப்பினாரா? இல்லையா?…!!!

சிவகங்கையில் லாரி மற்றும் காருக்கு இடையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு நபர் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

சிவகங்கையில் வேல் யாத்திரை காரணமாக பல்வேறு பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஒரே பாதையில் செல்வதற்கு போலீசார் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் சாலை ஓரமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் வழியாக நேற்று மதியம் ஒரு மணிக்கு தேவ கோட்டையை சேர்ந்த சூசை என்ற தொழிலாளி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று அவரின் மோட்டார் முந்திச் செல்ல முயன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது மோட்டார் சைக்கிளின் முன் சக்கரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் உள்ளேயும், பின் சக்கரம் லாரிகுள்ளும் மாட்டியுள்ளது. அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.

அந்தக் கோர விபத்தில் எந்தவித காயமும் இல்லாமல் தொழிலாளி சூசை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஆனால் அவற்றின் மோட்டார் சைக்கிள் அகற்றப்பட முடியவில்லை, அதனால் அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அனைவரும் காரை கைகளால் தூக்கி தள்ளி வைத்தனர். அதன்பிறகு மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

Categories

Tech |