வாலிபரை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரும் ஆனந்தை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் காயமடைந்த ஆனந்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து ஆனந்த் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வராஜ் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.