சிவகங்கை காரைக்குடி அருகே பள்ளி வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோவிலூர் பகுதியில் பிரகாஷ், சோலை, செந்தில் ஆகிய மூன்று பேர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று வேப்பங்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் இவர்கள் 3 பேரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது கல்லல் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது பள்ளி வாகனம் ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கல்லல் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.