மோட்டார் சைக்கிள் கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிலுக்குப்பட்டி கிராமத்தில் சவுந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டது .
இந்த விபத்தில் படுகாயமடைந்த சவுந்தரராஜனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சவுந்தரராஜன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.