செல்போன் பறித்த குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ஓட்டுனரான தருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் காவேரிப்பட்டணம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் தருணை பின்தொடர்ந்து வந்த வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தருண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போனை பிடித்த குற்றத்திற்காக குமார் மற்றும் பரணி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.