மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அருகே இருக்கும் வடசித்தூர் பள்ளிவாசல் அருகில் வாழ்ந்து வந்தவர் பெயிண்டர் சாலமன் ராஜ். இவருக்கு சரஸ்வதி பிரேமா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் இருக்கின்றனர்.
காந்திபுரம் பகுதியில் சென்ற 20 ஆம் தேதி சாலமன் ராஜ் பெயிண்ட் வேலையை முடித்துவிட்டு இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது கொண்டம்பட்டி அருகே நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.