Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்… வழியில் நேர்ந்த சோகம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறையில் மோட்டார் சைக்கிள் மணல் திட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வீரியபட்டியல் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கதிரவன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் கரூரில் உள்ள தனியார் பேருந்து பாடி கட்டும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 18-ஆம் தேதி அன்று கொடைக்கானலுக்கு குஜிலியம்பாறை வழியாக மோட்டார் சைக்கிளில் வீரியப்பட்டியிலிருந்து சென்றுள்ளனர். குஜிலியம்பாறை பெட்ரோல் பேங்க் வழியாக மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் திட்டின் மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் கதிரவன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் மோசமான காயங்கள் ஏற்பட்டது.

இதையடுத்து கதிரவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த விஜயகுமாருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டது. அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த குஜிலியம்பாறை காவல்துறையினர் கதிரவனின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |