மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சுவரின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் நகரில் கூலி தொழிலாளியான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் கடந்த 21- ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு பொட்டலூரணி விலக்கு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையின் அருகே இருந்த தடுப்பு சுவரின் மீது பாலமுருகனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மோதி விட்டது.
இதில் படுகாயம் அடைந்த பாலமுருகனை அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாலமுருகன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.