புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண் சாலையோர பள்ளத்தில் விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செவல்பட்டி பகுதியில் சுகுமாரன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் கொடும்பாளூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளுடன் சாலையோர பள்ளத்தில் எதிர்பாரத விதமாக தவறி விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுகுமாரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சுகுமாரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.