வாலிபரிடம் பணம் பறிக்க முயற்சி செய்த 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா கானாறு பகுதியில் தன்வீர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தன்வீர் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் தன்வீரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்ய முயன்றனர். ஆனால் தன்வீர் செல்போன், பணம் ஆகியவற்றை தர மறுத்ததால் 3 பேர் கொண்ட கும்பல் அவர் மீது பீர் பாட்டிலால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதனால் பலத்த காயமடைந்த தன்வீர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து தன்வீர் பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.