Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவன்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுமருதூர் பகுதியில் சோழராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீகாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இவர் தம்பிரான்படுகை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மின்கம்பத்தின் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஸ்ரீகாந்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஸ்ரீகாந்த் பரிதாபமாக விழுந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |