Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மஞ்சள் நிற விளக்குகள்…. குழப்பத்தில் வாகன ஓட்டிகள்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

மோட்டார் சைக்கிளில் மஞ்சள் நிற விளக்கை ஏரிய விட்டபடி செல்லும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடையர்பாளையம், தடாகம் ரோடு உள்ளிட்ட சாலைகளில் நவீன மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் வேகமாக செல்கின்றனர். மேலும் அதிக சத்தம் வரும் சைலன்சரை மோட்டார் சைக்கிளில் பொருத்தி இயக்குவதால் மற்ற வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் வாலிபர்கள் நவீன மோட்டார் சைக்கிளின் இருபுறமும் மஞ்சள் நிற விளக்கை எரிய விட்டபடி செல்வதால் எந்தப்பக்கம் திரும்புகிறார்கள் என்பது தெரியவில்லை.

இதனால் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்து நிலைதடுமாறி கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குண்டும், குழியுமாக இருக்கும் சாலையில் வாலிபர்கள் வேகமாக செல்லும் போது விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே மஞ்சள் நிற விளக்கை எரிய விட்டபடி வேகமாக செல்லும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |