மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரிபுரம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது நண்பரான சிவக்குமார் என்பவருடன் சிவகாசி-விருதுநகர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி ராதாகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து ராதாகிருஷ்ணனின் மனைவி விமலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.