மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எழுப்பட்டி சாலையில் திருச்சி மாவட்டம் தாளக்குடி கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இளையராஜாவின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்து விட்டது. இதில் படுகாயம் அடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளையராஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து இளையராஜாவின் மனைவி மணியம்மை தஞ்சை தமிழ் பல்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.