சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகக்கோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் நாக்கோடு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் செல்வன், பிரவீன், வெண்டலிகோட்டை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.