பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி தர்மம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து(24) என்பதும், சோளக்காட்டில் பதுங்கி இருக்கும் சிலருக்கு கொடுப்பதற்காக அரிவாள் உள்பட பல்வேறு ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து இசக்கிமுத்துவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.