பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்னம் சத்திரத்தில் இருந்து பாலமலை செல்லும் பிரிவு சாலை அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளை ஓட்டல் முன் நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் கையில் இருந்த சாவியை கொண்டு ரவியின் மோட்டார் சைக்கிளை திருடன் முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து ரவி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த வேலாயுதம் பாளையம் போலீச சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த வாலிபர் தண்ணீர் பந்தல் பாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்த வட மாநில இளைஞர் நீரன்(27) என்பதும் அவர் போதையில் மோட்டார் சைக்கிள் எடுத்துச் செல்ல முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவன உரிமையாளரிடம் வடமாநில வாலிபரை ஒப்படைத்து போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர்.