Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேர் அனுமதி…. பெரும் சோகம்…!!!

இருசக்கர வாகனங்களின் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் தனது மனைவி பவித்ராவுடன் சொந்த வேலைக்காக இருசக்கர வாகனத்தில் பழனிக்கு சென்றிருந்தார். இதேப்போன்று குமரலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் சாகுல் ஹமீது-ஜாபர் நிஷா தம்பதியினரும் இருசக்கர வாகனத்தில் பழனிக்கு சென்றிருந்தனர். இந்நிலையில் மாரிமுத்து மற்றும் சாகுல் ஹமீது தங்களுடைய இருசக்கர வாகனத்தில் அக்கமநாயக்கன்புதூர் பகுதியில் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் வழியில் பழனி நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக மாரிமுத்து மற்றும் சாகுல் ஹமீதுவின் இருசக்கர வாகனங்களின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மாரிமுத்து, பவித்ரா, சாகுல் ஹமீது, ஜாபர் நிஷா ஆகிய 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பழனி தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்தில் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாரிமுத்து மற்றும் சாகுல் ஹமீது ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து பவித்ரா மற்றும் ஜாபர் நிஷாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுனர் மகேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |