மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதிகள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அதிரப்பட்டி கிராமத்தில் நாகராஜ்-முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாகராஜ் அவரது மனைவி, மகன் கிருஷ்ணமூர்த்தி, மருமகள் தேன்மொழி ஆகியோர் சொந்த வேலை காரணமாக 2 மோட்டார் சைக்கிள்களில் விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ராமகவுண்டம்பட்டி அருகே சென்ற போது திருச்சி நோக்கி வேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள்கள் மீது பலமாக மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகராஜ், முத்துலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி, தேன்மொழி, கார் ஓட்டுநர் நடராஜன் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் அங்கு சென்று படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கும், விராலிமலை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.