மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பவளத்தானூர் அருந்ததியர் காலனியில் செந்தில்வேல்(31) என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் செந்தில்வேல் இரும்பாலை அருகே இருக்கும் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். இந்நிலையில் கே.ஆர்.தோப்பூர் பகுதியில் சென்றபோது செந்திலின் மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த செந்திலை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செந்தில்வேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.