மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் அ.தி.மு.க நிர்வாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழஎண்ணெய் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி(24) மகன் இருந்துள்ளார். இவர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி தனது நண்பரான ரஞ்சித்குமார் என்பவருடன் கடந்த 2-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அதேசமயம் முக்கண்ணாமலைப்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் பழனிச்சாமியுடன் மோட்டார் சைக்கிளில் இலுப்பூருக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சித்திரக்குளம் பாலம் அருகே சென்றபோது பெரியசாமியின் மோட்டார் சைக்கிளும் மணிகண்டனின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அறிந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெரியசாமியின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.