Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. துடிதுடித்து இறந்த வங்கி மேலாளர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

விபத்தில் சிக்கி வங்கி மேலாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி இந்திரா நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாமிநாதபுரத்தில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்வதற்காக செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இரவு பணி முடிந்து மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பிரவீன் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் செந்தில் குமாரின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செந்தில் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |