கடலூர் மாவட்டத்தில் உள்ள செங்கழுநீர் பள்ளம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிள்ளையார் தாங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் அதே பகுதியில் வசிக்கும் சேகர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காட்டுமன்னார்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிள் பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சேகர், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.