மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முதலபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மொபட்டில் கோவிந்தாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சீனிவாசனின் மொபட் மீது கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சீனிவாசன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.