எதிரெதிரே மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெற்கூர் விளக்கு கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரளிப்பாறையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுக்கு சென்றுவிட்டு தனது ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அறிவுக்கரசு என்பவரது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி பெரியசாமியின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் அறிவுக்கரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மேலும் படுகாயமடைந்த பெரியசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறிவுக்கரசி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.