மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கன்னிமார்பாளையத்தில் முருகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்குவாரியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேஷ் இரவு நேரத்தில் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் வேம்பத்திராம்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது லட்சுமணன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் முருகேஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது
இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த முருகேஷ் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.