மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்கையன்புதூரில் சதீஷ்குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி பார்க் பகுதியில் குடிநீர் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமார் வேலை முடிந்து தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் சிங்கையின் புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே ஸ்டாலின் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.