மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோதமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான பெலிக்ஸ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பெலிக்ஸ் மோட்டார் சைக்கிளில் கோதமங்கலம் நோக்கி சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பெலிக்ஸை அக்கம் பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பெலிக்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.