மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் தங்கதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுரை-விருதுநகர் நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து சாலையை கடக்க முயன்ற போது தங்கதுரையின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்கதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கதுரையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.