மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் அரவிந்தனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அரவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்தனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.