மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சடையம்பட்டி கிராமத்தில் தொழிலாளியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முருகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தனிச்சியம் சேவை சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.