மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள நிலையூரில் பண்டிய ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநீதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நவநீதன் தனது மோட்டார் சைக்கிளில் பெருங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் நவநீதனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நவநீதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.